Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

எப்போதும் குறை கண்டுபிடிக்கும் மற்றும் தந்திரமான ராசிகள்

வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட குண நலன்கள் மற்றும் மனப்பான்மை இருக்கும். ஒருவரின் ராசி மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் அவரின் குணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. எப்போதும் எதிர்மறையாக சிந்திக்கும் மற்றும் குற்றங்களை கண்டுபிடிக்கக்கூடிய ராசிகளைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என அறிய இந்த ஜோதிட வழிகாட்டியைப் படியுங்கள்.

குறை கண்டுபிடிக்கும் ராசிகள்

கடக ராசி

கடக ராசி சேர்ந்தவர்கள் எப்போதும் அனுதாப மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய இவர்கள், சில நேரங்களில் அவர்களுக்குள் ஏற்படக்கூடிய சில மாற்றம் உங்களுக்கு எதிராக உணர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதேபோல சில நபர்களை எந்த ஒரு காரணம் இன்றி வெறுக்க தொடங்குவார்கள். இதனால் அவர்களின் உணர்வுகள் முற்றிலும் அந்த நபருக்கு எதிரான வழியில் சிந்திக்க தொடங்கும். இதனால் இவர்கள் எதிராக சிந்திக்க கூடிய நபரோ அல்லது கடக ராசியினரோ பல பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும். அப்படி சிலர் மீது எப்போதும் குற்றம் அல்லது எதிர்மறையான சிந்தனையுடன் செயல்படுவதை நீங்களே உணர்ந்தால் உடனடியாக ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பது அவசியம்.

கன்னி ராசி

கன்னி ராசி சேர்ந்தவர்கள் விசித்திரமான மனநிலை கொண்டவர்கள். தனித்துவமாக எந்த ஒரு வேலையும் செய்ய நினைக்கக் கூடியவர்கள். கன்னி ராசியினர் தாங்கள் எதிர்பார்க்கும் வேலை அல்லது சூழ்நிலை சாதகமாக நடக்காவிட்டால், அதற்குக் காரணமாக நினைக்கும் சிலர் மீது, சில சமயம் தேவையில்லாமல் சிலருக்கு எதிராக, பாதகம் விளைவுக்கும் வகையில் யோசிக்க கூடியவர்களாக மாறிவிடுவார்கள். இவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு, தங்களின் திறமையை சரியாக பயன்படுத்தினால் நல்ல வெற்றி பெறலாம். அதோடு நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவது அவசியம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி ஆர்வத்திற்கும், உறுதியான மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் செயல்பாடு ரகசியமாகவும், திறமையானதாகவும் இருக்கும். சில சமயங்களில் இவர்கள் மர்மமாக ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். சில விஷயங்களில் இவர்கள் ஏமாற்றப்பட்டு இருந்தால், எதிர்மறையான எண்ணத்துடன் சிந்திக்க தொடங்கி விடுவார்கள். இதனால் தன் பழியைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக உள்ள சில நபர்களிடம் அவர்களின் குற்றத்தைக் கண்டுபிடிப்பதும் அல்லது எதிர்மறையாக செயல்படுவதுமாக நடந்து கொள்வார்கள். விருச்சிக ராசியினர் எப்போதும் தனிப்பட்ட வாழ்க்கையை நன்றாக இருக்க வேண்டும் என விரும்பினால் பொறுமையாகவும், எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் நன்றாக ஆலோசித்து எடுப்பது அவசியம். எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

மகர ராசி

மகர ராசியினர் கடின உழைப்பு மற்றும் பெரிய விஷயங்களை அடைய வேண்டும் என்றால் லட்சியத்துடன் செயல்படக் கூடியவர்கள். சில சமயங்களில் இவர்கள் தங்களின் வேலை மற்றும் இலக்குகளை அடைய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அந்த நேரத்தில் கூடுதல் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, சிலர் தங்களின் வேலையை தாமதமாக்கியதாக நினைத்து அவர்கள் மீது எதிர்மறையாக செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் பொறுமையாகவும், நேர்மறை சிந்தனை உடன் கடின உழைப்பைச் செலுத்த நல்ல வெற்றி பெறலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

கும்ப ராசி

கும்ப ராசி சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் வேளையில் வெற்றி அடைவது குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அதற்கு தடையாக வரக்கூடிய விஷயங்கள் குறித்து வருந்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையாக சிந்திக்கவும், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. அதனால் தடைகளை தாண்டி வெற்றி பெற நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவது அவசியம். தமிழ் ஜோதிடத்தில் இத்தகைய குணநலன்கள் ஆழமாக ஆராயப்படுகின்றன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், சுய விழிப்புணர்வு, பொறுமை, மற்றும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவதன் மூலம் இத்தகைய குணங்களை மாற்ற முடியும். தேவைப்பட்டால், நல்ல ஜோதிட ஆலோசனை பெறுவதும் உதவும்.

கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மற்றும் கும்பம் ஆகிய ராசியினர் மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்கும் போக்கு அதிகம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். இது ஜோதிட ரீதியான ஆய்வு.

தமிழ் ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியின் கிரக நிலைகள் மற்றும் அம்சங்கள் ஒருவரின் தனிப்பட்ட குணநலன்களை வடிவமைக்கின்றன. இதில் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் குறை கண்டுபிடிக்கும் போக்குகளும் அடங்கும். சரியான வழிகாட்டுதல் மூலம் இதை சரிசெய்யலாம்.

Our Other Services