Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சோற்று கற்றாழை மற்றும் எடை இழப்பு: ஆயுர்வேத வழிகாட்டி

சோற்று கற்றாழை அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. குறிப்பாக, எடை இழப்புக்கு இது எப்படி உதவுகிறது என்பது குறித்து சமீபகாலமாகப் பலரும் ஆர்வத்துடன் எடுத்து வருகின்றனர். இந்த கட்டுரையில், சோற்று கற்றாழை உடல் எடை குறைப்புக்கு எப்படி உறுதுணையாக அமைகிறது என்பதை ஆயுர்வேதக் கண்ணோட்டத்தில் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

சோற்று கற்றாழை எடை இழப்புக்கு எப்படி உதவுகிறது?

கற்றாழையில் 200-க்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், என்சைம்கள், தாதுக்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் போன்றவை அவற்றில் அடங்கும். இவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகின்றன.

வளர்சிதை மாற்றம் மேம்பாடு

கற்றாழையில் உள்ள Acemannan என்ற வேதிப்பொருள் சைட்டோகைன் செயல்பாட்டை ஊக்குவித்து, உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. உடல் அதிக ஆற்றலை பயன்படுத்தும் போது, அதிக கலோரிகளை எரித்து உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியமான உடல் எடை மேலாண்மைக்கு ஒரு முக்கிய அம்சம்.

செரிமான ஆரோக்கியம்

கற்றாழை செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் இயற்கையான என்சைம்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைத்து, செரிமானத்தை சீராக்குகிறது. இதனால், உணவில் இருந்து உடல் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது, இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

பசி உணர்வு கட்டுப்பாடு

கற்றாழை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இது குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், உணவு மீதான ஆசையைத் தவிர்க்கலாம் மற்றும் தேவையற்ற கொழுப்பு சேமிப்பையும் குறைக்கலாம். இதில் உள்ள Glucomannan என்னும் நார்ச்சத்து நிறைந்த பொருள், வயிற்றில் திருப்திகரமான உணர்வை ஏற்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இந்த குளுக்கோமனன் இயற்கையானது என்பதால் உடலுக்குக் கெடுதி இல்லை.

எடை இழப்புக்கு கற்றாழை எடுக்கும் முறை மற்றும் முக்கிய குறிப்புகள்

  • சிறிய அளவில் தொடங்கவும்: நாள் ஒன்றுக்கு 1-2 டீஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் சாப்பிடலாம் அல்லது கற்றாழை சப்ளிமெண்ட் 1 எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு உடலில் ஏதேனும் மாற்றம் உண்டாகிறதா என்பதை அறிந்து தொடர்ந்து சாப்பிடலாம்.
  • சமச்சீர் உணவு முறை: கற்றாழையுடன் பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த முழு உணவுடன் கற்றாழை பயனுள்ளதாக இருக்கும். இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு மிக முக்கியம்.
  • போதுமான தண்ணீர்: கற்றாழை நச்சுத்தன்மையை நீக்க, போதுமான தண்ணீர் அருந்துவது அவசியம். இது வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
  • தொடர்ந்து உட்கொள்ளுதல்: கற்றாழை எடுத்துக்கொண்ட பிறகு உடல் மாற்றங்கள் பற்றி அறிய தொடர்ந்து 4-6 வாரங்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பலன் தெரிய ஆரம்பிக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கற்றாழை உடல் பருமனுக்கு ஒரு துணைப் பொருள் என்பதை மனதில் கொள்ளுங்கள். இது செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் பசி கட்டுப்பாடு மூலம் மறைமுகமாக உதவுகிறது. தீவிர உடல் உழைப்பின்மை மற்றும் மோசமான உணவுப் பழக்கங்கள் இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களும் அத்தியாவசியம். இது ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியுடன் இணையாகச் செயல்படும்.

சிலருக்கு கற்றாழை பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம். வயிற்றுப்போக்கு அல்லது வயிறுப்பிடிப்பு வலி ஏற்படலாம். நீரிழிவு மற்றும் இரத்தம் மெலிக்கும் மாத்திரைகளுடன் இது வினை புரியலாம். எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படலாம். எனவே, ஆரம்ப நிலையில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், சிறுநீரக கோளாறுகள், கல்லீரல் பிரச்சனை கொண்டவர்கள், மற்றும் உடல் பிரச்சனைகளுக்காக மருந்துகள் எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழையை எடுக்க கூடாது. உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து கவனத்தில் கொள்வது நல்லது.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, உணவு முறை, நோயறிதல் போன்ற சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு jothidam360.in பொறுப்பேற்காது.

Our Other Services