முகத்தில் இருக்கும் முடிகளை அகற்ற ஷேவிங் செய்வது எளிதான ஒன்று. இது வேக்சிங் மற்றும் த்ரெட்டிங் விட எளிதானது என்பதால் பெரும்பாலான பெண்கள் இதை விரும்புகிறார்கள். இது சருமத்தில் இறந்த செல்களையும் அகற்ற உதவும். எனினும் முகத்திற்கு ஷேவிங் செய்யும் போது பெண்கள் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். இல்லையெனில் இலேசான வெட்டுக்கள் அல்லது சுத்தம் செய்யப்படாத பலரும் பயன்படுத்திய ரேஸர் வகைகளால் தொற்றுகளும் பரவலாம். முகத்திற்கு ரேஸர் பயன்படுத்துபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
முகத்திற்கு ஷேவிங் செய்யலாமா?
பல பெண்களுக்கு இந்த கேள்வியும் குழப்பமும் உண்டு. முகத்தில் இருக்கும் முடியை அகற்ற விரும்பினால் ஷேவிங் செய்யலாம். ஆனால் சரியான முறையில் செய்யலாம் என்கிறார் டாக்டர். ஸ்வேதா. முகத்தில் ஷேவிங் செய்யும் பெண்கள் 50% பேர் எனக்கு ஷேவிங் செய்வது முகத்தில் முடியில்லாமல் அழகான தோற்றத்தை அளிக்கிறது என்பார்கள். சில பெண்களுக்கு வீட்டில் இதில் விருப்பமில்லை அல்லது ஷேவிங் செய்வதன் மூலம் இந்த முடி அடர்த்தி அதிகரிக்குமோ என்னும் கவலை இருக்கும். அதனால் முகத்திற்கு ஷேவிங் செய்து கொள்வது உங்கள் தனிப்பட்ட விருப்பமே.
முகத்தில் இருக்கும் முடி வகைகள்
முகத்தில் இருக்கும் முடி இரண்டு வகைகளில் இருக்கும்:
- Vellus Hair: மிக மெல்லியதாக இருக்கும், வெளிர் நிறத்தில் இருக்கும் முடி. இது பெரும்பாலும் கன்னம், நெற்றி, உதடுகள், கழுத்து போன்ற பகுதிகளில் காணப்படும். மெல்லிய முடியை கொண்டிருப்பவர்கள் இதை ரேஸர் மூலம் அகற்ற முயற்சிக்கலாம்.
- Terminal Hair: அடர்த்தியாக இருக்கும் முடி. இந்த இரண்டாவது வகையான Terminal Hair லேசர் சிகிச்சையின் மூலமாகத்தான் குறையும். அது தான் முடியை அகற்ற சிறந்த வழியும் கூட.
ரேஸர் மூலம் முடி அகற்றுவதால் என்ன நன்மை கிடைக்கிறது?
முகத்தில் தேவையற்ற முடிகள் இருந்தாலே அது தனியாக முக அழகை குறைத்து காட்டும் என்பதை அறிவோம். அதனால் முகத்தில் இருக்கும் மெல்லிய முடியை அகற்ற ஷேவிங் செய்யலாம் என்றும் டாக்டர் ஸ்வேதா பரிந்துரைக்கிறார். மேலும் ஷேவிங் செய்வதன் மூலம் முகத்தில் முடி இல்லாமல் பளிச்சென்ற தோற்றம் கிடைக்கும். இதனாலே பல பெண்கள் ஷேவிங் செய்ய விரும்புவதுண்டு. ஷேவிங் செய்வது உங்கள் அழகை மேம்படுத்தி காட்டும் என்றாலும் நீங்கள் முன்னதாக சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஷேவிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
- ஷேவிங் செய்ய பயன்படுத்தப்படும் ரேஸர் Straight Facial Razor ஆக இருக்க வேண்டும். உடலுக்கும் முகத்திற்கும் ஒரே மாதிரியான ரேஸர் பயன்படுத்த கூடாது.
- ஷேவிங் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்து கழுவி மாய்சுரைசர் போட்டு பிறகு ஷேவிங் செய்ய வேண்டும்.
- ஷேவிங் செய்யும் போது முடி திசைக்கு ஏற்ப ஷேவிங் செய்ய வேண்டும்.
- பிளேட் 45 டிகிரி கோணத்தில் சிறிய அளவு ஸ்ட்ரோக் இருக்கும் படி பார்த்துகொள்ள வேண்டும்.
- ஷேவிங் செய்யும் போது தோலில் எங்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
ஷேவிங் செய்த பிறகு செய்ய வேண்டியவை
ஷேவிங் செய்து முடித்ததும் மேக்-அப் போட கூடாது. முகத்தை சுத்தம் செய்து மாய்சுரைசர் மற்றும் சன்ஸ்க்ரீன் போட வேண்டும். இப்படி கவனமாக ஒவ்வொன்றையும் கவனித்து செய்தால் ஃபேஸ் ஷேவிங் நல்லது. அதோடு ஷேவிங் செய்வதன் மூலம் முடி வளர்ச்சியும் இருக்காது. முடி தடிமனாகவும் மாறாது என்கிறார் டாக்டர் ஸ்வேதா.
முகத்தில் தேவையில்லாமல் முடி வளர என்ன காரணம்?
Vellus hair என்பது கண்ணுக்கு தெரியாத மெல்லிய முடி. இது முகம் மற்றும் உடலின் பெரும்பகுதியில் இருக்கும். இது உடலில் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது மற்றும் வியர்வையை ஆவியாக்குவது போன்ற வேலைகளை செய்கிறது. Terminal hair என்னும் தடிமனான வளர்ச்சிக்கு சில உடல்நல பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற ஹார்மோன் பிரச்சனைகள் இருந்தால், முகத்தில் அதிக முடி வளரலாம். அதனால் முகத்தில் அதிக முடி வளர்ந்தால் ஷேவிங் மட்டும் செய்யாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியம்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு Jothidam360 பொறுப்பேற்காது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஜோதிடம் 360 பற்றி
Jothidam360.in இல் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் ஜோதிடம், முருகன் வழிபாடு, ஆறுபடை வீடுகள் பற்றிய தகவல்களையும் காணலாம். எங்கள் தளத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பல கட்டுரைகள் உள்ளன.