முடி வளர, பளபளப்பாக இருக்க, வலிமையாக வைத்திருக்க ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதுண்டு. குறிப்பாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க் தேடினால் முடி உதிர்தலை குறைத்து பளபளப்பை அதிகரிக்கலாம். இது இயற்கையானதும், மலிவானதுமாகும். இந்த கட்டுரையில், சியா விதைகள் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி இயற்கையான முறையில் முடி வளர்ச்சிக்கு உதவும் ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறையையும், பயன்படுத்தும் வழிமுறைகளையும் காணலாம்.
சியா விதை தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
- - சியா விதைகள் - 2 டீஸ்பூன்
- - வெதுவெதுப்பான தண்ணீர் - அரை கப்
- - தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- - அத்தியாவசிய எண்ணெய் (ரோஸ் மேரி) - ஒரு துளி (விரும்பினால்)
தயாரிக்கும் படிகள்:
- சியா விதைகளை வெதுவெதுப்பான நீரில் 20-30 நிமிடங்கள் ஊறவைக்கவும். இது ஜெல் பதத்துக்கு வரும்.
- ஊறிய சியா விதைகளை நன்றாக பேஸ்ட் பதத்துக்கு கலக்கவும் அல்லது பிசையவும். ப்ளெண்டரில் ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம்.
- தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும்.
- கடைசியாக, ஒரு துளி அத்தியாவசிய எண்ணெய் (ரோஸ் மேரி) சேர்த்து கலக்கவும். இப்போது சியா விதை தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் தயார்.
கூந்தலில் சியா விதை தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் பயன்படுத்தும் முறை
- கூந்தலை எண்ணெயில்லாமல் சுத்தமாக கழுவி, சிக்கில்லாமல் சீவி சிறு சிறு பகுதிகளாக பிரிக்கவும்.
- கூந்தலின் வேரிலிருந்து நுனி வரை மாஸ்க்கை மென்மையாக அனைத்து இடங்களிலும் பரவும்படி தடவவும்.
- உச்சந்தலையில் விரல்களால் நல்ல அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
- கூந்தலை ஷவர் கேப் கொண்டு சுற்றி 30-45 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
- மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி எடுக்கவும்.
எப்போது பயன்படுத்த வேண்டும் மற்றும் முக்கிய குறிப்புகள்
- வாரத்துக்கு ஒருமுறை இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்.
- தொடர்ந்து பயன்படுத்தும் போதுதான் இதன் முழு பலனையும் பெற முடியும்.
- தேங்காய் எண்ணெயை ஹேர் மாஸ்க் கலவையில் சேர்ப்பதற்கு முன்பு மென்மையாக சூடேற்றுங்கள். இது ஊட்டச்சத்துக்கள் ஊடுருவ உதவும்.
- ஹேர் மாஸ்க் போடும் போது உச்சந்தலை வறட்சியாக இல்லாமல் சற்று ஈரப்பதமாக இருக்கட்டும். அப்போதுதான் ஹேர் மாஸ்க் நன்றாக பொருந்தும்.
- எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை இருந்தால் முடியின் நுனிகளில் அதிகமாகவும், வேர்ப்பகுதிகளில் குறைவாகவும் பயன்படுத்தலாம்.
- சியா விதைகளை தினசரி உணவிலும், தேங்காய் எண்ணெயை சமையலிலும் சேர்த்து வருவது கூந்தல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும்.
சியா விதைகளின் பயன்கள்: முடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகின்றன?
சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளன. இவை முடி நீளமாகவும், வலுவாகவும் வளர உதவுகின்றன:
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: உச்சந்தலை அழற்சியைக் குறைத்து, மயிரின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
- புரதம்: முடியின் இழைகளை வலிமையாக்கி, முடி உதிர்தலை தடுக்கிறது.
- துத்தநாகம்: முடி மெலிவதை தடுத்து, முடி நுண்ணறைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- சியா விதைகள் கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பு அளித்து இயற்கையான சீரம் போல் செயல்படுகிறது.
தேங்காய் எண்ணெயின் பயன்கள்: முடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகின்றன?
தேங்காய் எண்ணெய் பாரம்பரியமாகவே கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கூந்தலின் ஆழம் வரை சென்று ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது:
- கொழுப்பு அமிலங்கள்: பலவீனமான, உடையக்கூடிய இழைகளில் குறைபாடுள்ள புரதத்தை அதிகரிக்கிறது.
- அழற்சி எதிர்ப்பு: உச்சந்தலை தொற்று, பொடுகு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
- ஈரப்பதம்: தலைமுடிக்கு ஈரப்பதம் அளித்து கூந்தலை பலப்படுத்தவும் உதவுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு Jothidam360 பொறுப்பேற்காது.