Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மினாக்சிடில்: முடி வளர்ச்சிக்கு ஒரு முழுமையான வழிகாட்டி

முடி உதிர்தல் என்பது பலருக்கும் ஒரு பெரும் கவலையாகும். இதற்கான தீர்வுகளில் ஒன்றாக மினாக்சிடில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுரை மினாக்சிடில் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, அதன் நன்மைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஜோதிடம் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளும் துணை புரியும் என்றாலும், மருத்துவ அணுகுமுறைகளையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். முருகப் பெருமானின் அருளாலும், சரியான மருத்துவ ஆலோசனையாலும், சிறந்த ஆரோக்கியத்தைப் பெறலாம்.

மினாக்சிடில் என்பது என்ன?

மினாக்சிடில் என்பது முடி வளர்ச்சிக்காகப் பயன்படுகிறது. அதனால் இது அதற்காக தயாரிக்கப்பட்ட ஒன்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மினாக்சிடில் என்பது முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. அது அடிப்படையில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு கொடுக்கப்பட்ட போது அது அவர்களுடைய முடி உதிர்தலை நிறுத்தி, வளர்ச்சியைத் தூண்டியது கண்டறியப்பட்டது. அதன்பின்னரே இது முடி வளர்ச்சிக்கு பரிந்துரைப்பது அதிகமாகிவிட்டது.

மினாக்சிடால் முடி வளர்ச்சிக்கு எப்படி உதவும்?

  • முடி உதிர்வை நிறுத்தும்: மினாக்சிடால் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு முதலில் அது ஏற்கனவே கொட்டிக் கொண்டிருக்கிற முடி உதிர்வைத் தான் தடுத்து நிறுத்த ஆரம்பிக்கும். நாளடைவில் முடியின் வேர்க்கால்களில் இருக்கிற நுண் குழாய்களுக்குள் சென்று வலுவாக்கி முடி உதிர்தலை ஏற்படுத்தும் காரணிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும்.
  • ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்: முடி உதிர்தல் அதிகரித்து, முடியின் வளர்ச்சி தடைபடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று உச்சந்தலையில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பது தான். மினாக்சிடால் பயன்படுத்தும்போது ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த நாளங்களிலும் முடியின் வேர்க்கால்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க ச் செய்கிறது.
  • நீளமும் அடர்த்தியும் அதிகரிக்கும்: சில மூலக்கூறுகள் முடி உதிர்வதை தடுத்து, முடியின் நுண்குழாய்களில் முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு நிறுத்தி விடும். ஆனால் மினாக்சிடிலை பொருத்தவரையில் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது அது முடியின் நீளத்தையும் அதிகரிக்கும். அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

மினாக்சிடில் பயன்படுத்துவதில் உள்ள பக்க விளைவுகள் என்ன?

மினாக்சிடில் பயன்படுத்தும் போது கீழ்வரும் சில பக்க விளைவுகள் உண்டாகும்.

  • உச்சந்தலை அரிப்பு: மினாக்சிடில் பயன்படுத்துவதில் ஏற்படும் பொதுவாக பக்க விளைவுகளில் ஒன்று தான் இந்த உச்சந்தலை அரிப்பு மற்றும் எரிச்சல், உச்சந்தலை ஸ்கின் சிவந்து போதல் ஆகியவை.
  • ஆரம்பகால முடி உதிர்தல்: மினாக்சிடில் புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கும்போது ஆரம்பத்தில் முடி உதிர்தல் இருக்கும். இது பிறகு சரியாகிவிடும்.
  • வறட்சி அடைதல்: மினாக்சிடில் பயன்படுத்தும்போது முடியின் வேர்க்கால்களும் முடியும் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதனால் பொடுகு போன்றவை உருவாகி செதில்களாக உதிர்ந்து கொட்டும்.
  • தேவையற்ற முடி வளர்ச்சி: மினாக்சிடில் பயன்படுத்தும் போது மிக முக்கியமான பக்க விளைவு என்னவென்றால் அது தேவையற்ற முடி வளர்ச்சியைத் தூண்டுவது. குறிப்பாக முகம், கன்னத்தின் ஓரங்களில் முடி வளர்ச்சி இருக்கும்.
  • தலைசுற்றல்: மினாக்சிடில் சிலருக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தலைசுற்றலை ஏற்படுத்தும். இது தொடர்ந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
  • அழற்சி: சிலருக்கு மினாக்சிடிலில் உள்ள மூலக்கூறுகள் அழற்சி மற்றும் அழற்சி சார்ந்த ஸ்கின் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

இறுதியாக, மேற்கண்ட இத்தனை நன்மைகளும் சில லேசான பக்க விளைவுகளும் மினாக்சிடில் பயன்படுத்தும் போது ஏற்படும். இந்த மினாக்சிடில் நிறைய மருந்து கடைகளில் ஈஸியாக கிடைக்கிறது என்று நீங்களே வாங்கிப் பயன்படுத்த கூடாது. மருத்துவரிடம் ஆலோசனையும் பரிசோதனையும் செய்து கொண்ட பின்னரே, அவர்கள் பரிந்துரைக்கும் அளவுகளில் பயன்படுத்த வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மினாக்சிடில் முதன்முதலில் உயர் ரத்த அழுத்தத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்ட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உச்சந்தலை அரிப்பு, ஆரம்பகால முடி உதிர்தல், வறட்சி, தேவையற்ற முடி வளர்ச்சி, தலைசுற்றல் மற்றும் அழற்சி ஆகியவை பொதுவான பக்க விளைவுகளில் சில.

இல்லை, மினாக்சிடிலை மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிசோதனைக்குப் பின்னரே, அவர்கள் பரிந்துரைக்கும் அளவுகளில் பயன்படுத்த வேண்டும்.

Our Other Services