Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கடன் பிரச்சனைகள் தீர ஜோதிட பரிகாரங்கள்

வாழ்வில் கடன் தொல்லைகள் என்பது பலருக்கும் பெரும் சுமையாக அமைகிறது. ஜோதிட ரீதியாக கடன் ஏற்பட காரணம் என்னவென்றும், அத்தகைய கடன் சுமையிலிருந்து விடுபட உதவும் எளிய மற்றும் சக்திவாய்ந்த தமிழ் ஜோதிட பரிகாரங்கள் பற்றியும் இங்கு விரிவாகக் காணலாம்.

கடன் பிரச்சனையின் மூல காரணங்கள்: ஜோதிட ரீதியான பார்வை

கடன் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, நம்முடைய ஜாதகத்தில் என்ன பிரச்சனை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கடன் பிரச்சனைகள் தீருவதற்கு சில எளிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வந்தாலே அதிலிருந்து விடுபட முடியும். என்ன பரிகாரம் செய்தால் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கடன் பிரச்சனை என்றால் என்ன?

கடன் என்பது இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. கடனே இல்லாதவர்கள் என்றால் வெகு சிலரையே நம்மால் சொல்ல முடியும். சிலருக்கு சிறிய அளவில் கடன் இருக்கும். சிலர் பெரிய அளவில் கடன் வாங்கிவிட்டு, கடனைத் திருப்பி அடைக்க முடியாமலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் கடன் வாங்கிவிட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் கடன் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதனால் ஏதோ ஒரு வகையில் அனைவரும் கடனால் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

யாருக்கு கடன் பிரச்சனை வரும்? (ஜாதக அமைப்பு)

யாருக்கெல்லாம் கடன் பட்டு, அதனால் கஷ்டப்படும் நிலை ஏற்படும்? அந்தக் கடனில் இருந்து விடும் நிலை யாருக்கெல்லாம் ஏற்படும் என்பதை அவர்களுடைய ஜாதக அமைப்பை வைத்தே தெரிந்துகொள்ளலாம். ஜாதகத்தில் கடன் பிரச்சனையை குறிக்கும் இடம் 6ம் இடம். 6ம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகம், 6ம் இடத்து அதிபதி, புதன் பகவான் ஆகியவைதான் கடன் பிரச்சனையை குறிப்பதாகும்.

கடனை உங்களால் அடைக்க முடியுமா? கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் யோகம் உள்ளதா என்பதை லக்னம் மற்றும் லக்னாதிபதியை வைத்துச் சொல்லிவிடலாம். 6ம் இடம் சுபத்தன்மையுடன் இருந்தால் கடன்களால் வளர்ச்சி ஏற்படும். ஜாதகத்தில் 6ம் இடம் கெட்டுப்போய் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பாவ கிரகங்கள் 6ம் இடத்தில் இருந்தாலோ கடன்களால் பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். கடன் அடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டும். உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து, கடன்கள் அடைபட வேண்டும் என்றால் 3 எளிய வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.

கடன் பிரச்சனைகள் தீர சக்திவாய்ந்த தமிழ் பரிகாரங்கள்

வம்பு, வழக்குகள், பிரச்சனைகளில் இருந்து விடுபட சக்திவாய்ந்த எளிய பரிகாரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

  • 1. மகாலட்சுமி வழிபாடு: செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி வழிபாடாகும். தினமும் வீட்டில் குபேர நேரம் என சொல்லக்கூடிய மாலை 6.30 மணிக்கு மேல் வீட்டில் உள்ள மகாலட்சுமி படத்திற்கு மல்லிகை, தாமரை மலர்கள் சூட்டி, நெய் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். ஏதாவது ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். மகாலட்சுமியின் காயத்ரி மந்திரம் 18 முறையும், கனகதாரா ஸ்தோத்திரத்தை 6 முறையும் சொல்லி வழிபட வேண்டும். அதோடு, வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும் நெய் தீபம் ஏற்றி வைத்து, கனகதாரா ஸ்தோத்திரத்தை 6 முறை சொல்லி வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பொருளாதார ரீதியாக உயர்வு ஏற்பட்டு, கடன்கள் அடைபடுவதற்கான அமைப்பு நிச்சயம் ஏற்படும்.
  • 2. நரசிம்மர் வழிபாடு: மிகக் கடுமையான கடன் பிரச்சனையில் சிக்கி இருந்தால் நரசிம்ம வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். மாதம் ஒரு முறை ஜென்ம நட்சத்திரம் அன்று நரசிம்மர் கோவிலுக்கு சென்று 9 நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை 9 முறை வலம் வர வேண்டும். பிறகு நரசிம்மருக்குரிய ருண விமோசன ஸ்லோகத்தைப் படித்து வந்தால் கடன் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
  • 3. தான தர்ம பரிகாரம்: பொதுவாக கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு கர்மாக்களும் ஒரு காரணமாக அமைகிறது. இதனால் வழிபாட்டுடன் கர்மாக்கள் குறைவதற்கான சில விஷயங்களையும் செய்து வந்தால் கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர முடியும். மாற்று திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உணவு தானம், வேண்டிய உதவிகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றைச் செய்யலாம். பசு மாட்டிற்குத் தேவைப்படும் மாட்டுத்தீவனம் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது, பசுவிற்கு வாழைப்பழம் கொடுப்பது ஆகியவற்றைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஜாதகத்தில் 6ம் இடம், 6ம் இடத்து அதிபதி, மற்றும் புதன் பகவான் ஆகியோர் கடன் பிரச்சனையை குறிக்கும் முக்கிய காரணிகளாகும்.

தினமும் மாலை 6.30 மணிக்கு மேல் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு மல்லிகை, தாமரை மலர்கள் சூட்டி, நெய் விளக்கேற்றி, காயத்ரி மந்திரம் (18 முறை), கனகதாரா ஸ்தோத்திரம் (6 முறை) சொல்லி வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் நெய் தீபம் ஏற்றலாம்.

ஆம், மிகக் கடுமையான கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட நரசிம்மர் வழிபாடு சிறந்த பரிகாரமாகும். ஜென்ம நட்சத்திரம் அன்று நரசிம்மர் கோவிலில் நெய் தீபம் ஏற்றி, ருண விமோசன ஸ்லோகத்தைப் படித்து வரலாம்.

Our Other Services