உறக்கத்தின் போது நாம் காணும் கனவுகள், நம் வாழ்வின் கர்ம வினைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். சில கெட்ட கனவுகள் மனதளவில் நம்மைப் பாதித்து, நிஜ வாழ்விலும் செயல்பாடுகளைத் தடுக்கும். இந்த தீய கனவுகளிலிருந்து விடுபட ஜோதிட பரிகாரங்கள் மிக அவசியம். உங்கள் ராசிக்கு ஏற்ற தனித்துவமான பரிகாரங்களை அறிந்து, நிம்மதியான உறக்கம் பெறுங்கள்.
மேஷம் - உப்பு நீர் பரிகாரம்
ஜோதிட நிபுணர்கள் கூற்றுப்படி, உப்பு தூய்மையின் அடையாளம். இது எதிர்மறை ஆற்றலை விரட்டி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேஷ ராசியினர் தங்கள் படுக்கையறையை தினமும் உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்வதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபடலாம்.
ரிஷபம் - வெதுவெதுப்பான நீர் சிகிச்சை
பூமி ராசியான ரிஷப ராசியினர், இரக்க குணத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் நிம்மதி இல்லா உறக்கம் மற்றும் கெட்ட கனவுகளை அனுபவிக்கலாம். இவர்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவி சுத்தம் செய்வது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
மிதுனம் - தேங்காய் எண்ணெய் பிரயோகம்
மிதுன ராசி கொண்டவர்கள் நேர்மறை எண்ணங்களுக்குப் பெயர் பெற்றவர்கள். கனவில் காணும் கெட்ட விஷயங்களைத் தவிர்க்க, இரவில் உறங்கும் போது நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி உறங்கலாம். இது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும்.
கடகம் - பூண்டு பரிகாரம்
கெட்ட ஆற்றலை விரட்டும் பண்பு கொண்ட பூண்டை, கடக ராசியினர் தங்கள் கனவில் வரும் கெட்ட விஷயங்களை விரட்ட தலையணைக்கு கீழ் 3 - 5 பூண்டு பற்களை வைத்து உறங்குவது நல்லது. இது நல்ல கனவுகளுக்கும் நல்ல உறக்கத்திற்கும் வழிவகுக்கும்.
சிம்மம் - சீரக விதை சிகிச்சை
ஆளுமை பண்புகளுக்குப் பெயர் பெற்ற சிம்ம ராசியினர் கெட்ட கனவுகளைக் காண்பது அவர்களின் வீழ்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கெட்ட கனவுகளைத் தவிர்க்க, தலையணைக்கு கீழ் ஒரு ஸ்பூன் அளவு சீரக விதைகளை சிறு துணியில் முடிந்து வைத்து உறங்குவது நல்லது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சீரகத்தை மாற்றி, நெருப்பில் இட்டு எரிப்பது சிறந்தது.
கன்னி - மஞ்சள் மற்றும் அரிசி பரிகாரம்
தீய சக்திகளை விரட்டும் பண்புக்குப் பெயர் பெற்ற மஞ்சளுடன் 3 மடங்கு அளவு அரிசி கலந்து, ஒரு துணியில் முடிந்து தலையணைக்கு கீழ் வைத்து உறங்குவது கன்னி ராசியினரின் கெட்ட கனவுகளை விரட்டுவதோடு, அவர்களின் ஆரோக்கியமான உறக்கத்திற்கும் வழிவகுக்கும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
துலாம் - படிகாரப் பிரயோகம்
துணிச்சலுக்குப் பெயர் பெற்ற துலாம் ராசியினர், தங்கள் கனவில் வரும் கெட்ட விஷயங்களை விரட்ட சிறிதளவு படிகாரத்தை தங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வரலாம். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் இந்த படிகாரம், ஆரோக்கியமான உறக்கம் மற்றும் நல்ல கனவுகளுக்கு வழிவகுக்கும்.
விருச்சிகம் - துடைப்பம் குச்சி பரிகாரம்
விருச்சிக ராசி கொண்டவர்கள் தங்கள் கனவில் வரும் கெட்ட விஷயங்களைத் தவிர்க்க, வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் (தென்னை) துடைப்பத்தின் குச்சியை படுக்கையின் அடியில் வைத்து உறங்குவது நல்லது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி, நேர்மறை ஆற்றலை அதிகரித்து, ஆரோக்கியமான உறக்கம் மற்றும் நல்ல கனவுகளுக்கு வழிவகுக்கும்.
தனுசு - துளசி செடி வளர்த்தல்
சாகசப் பிரியர்களான தனுசு ராசியினர் தங்கள் படுக்கையறையில் துளசி செடிகளை வளர்ப்பதன் மூலம் தங்கள் கனவில் வரும் கெட்ட விஷயங்களில் இருந்து விடுபடலாம். முறையாகப் பராமரித்து வர, கெட்ட கனவுகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியான இரவு உறக்கம் மற்றும் நல்ல கனவுகளைப் பெறலாம்.
மகரம் - திசை பிரயோகம்
நாம் படுக்கும் திசையைப் பொறுத்து நம் தூக்க நிலை மற்றும் கனவுகள் மாறுபடும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், மகர ராசி கொண்டவர்கள் தங்கள் படுக்கையை தெற்கில் தலை வைத்து படுக்கும்படி அமைத்து படுப்பது நல்லது. பூமி ராசியான மகர ராசியினருக்கு இது சிறந்த ஒரு தீர்வாக இருக்கும்.
கும்பம் - செம்பு பாத்திரத்தில் நீர்
கும்ப ராசி கொண்டவர்கள் தங்கள் கனவில் வரும் கெட்ட விஷயங்களைத் தவிர்க்க, சிறு செம்பு பாத்திரம் ஒன்றில் 4-ல் 3 பங்கு அளவு நீர் நிரப்பி, படுக்கைக்கு அருகில் வைத்து உறங்கலாம். செம்பு பாத்திரத்தில் உள்ள இந்த நீர், நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு உங்கள் கெட்ட கனவுகளுக்கு தீர்வு காணவும் உதவும்.
மீனம் - சாம்பிராணி பயன்பாடு
எதிர்காலம் குறித்து ஆழமான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் மீன ராசியினர், தங்கள் கனவில் வரும் கெட்ட விஷயங்களைத் தவிர்க்க வெள்ளி, செவ்வாய் வாரம் இரண்டு முறை தங்கள் படுக்கையறையில் சாம்பிராணி புகையிடுவது நல்லது. அறையில் இருக்கும் கெட்ட ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை அதிகரித்து, நல்ல கனவுகள் காண வழிவகை செய்கிறது.
இந்த ஜோதிட பரிகாரங்கள் மூலம் நீங்கள் நிம்மதியான உறக்கத்தைப் பெற்று, கெட்ட கனவுகளில் இருந்து விடுபட்டு, நேர்மறை எண்ணங்களுடன் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். மேலும் தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய இத்தகைய நம்பிக்கைகள், பலருக்கும் மன அமைதியை அளிக்கின்றன.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கர்ம வினைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக கெட்ட கனவுகள் வரலாம் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும் இதற்கு காரணமாக அமையலாம்.
ஆம், ஒவ்வொரு ராசிக்கும் உரிய குறிப்பிட்ட ஜோதிட பரிகாரங்கள் எதிர்மறை ஆற்றலை நீக்கி நல்ல உறக்கத்திற்கு உதவும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர். இது பல நூற்றாண்டுகளாக தமிழ் ஜோதிடத்தில் பின்பற்றப்படும் முறையாகும்.
உப்பு நீர் பயன்படுத்துதல், வெதுவெதுப்பான நீரில் கால் கழுவுதல், பூண்டு அல்லது சீரகம் தலையணைக்கு கீழ் வைத்தல், படுக்கை அறையில் துளசி வளர்த்தல் போன்ற பொதுவான பரிகாரங்கள் கெட்ட கனவுகளைத் தவிர்க்க உதவும்.