Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஐப்பசி மாத அன்னாபிஷேகம்: தேதி, நேரம், முக்கியத்துவம் மற்றும் பலன்கள்

ஐப்பசி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்று அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படும் அன்னாபிஷேகம் ஆகும். இது தமிழ் கலாச்சாரத்தில் ஆழமான வேர்களைக் கொண்டது. ஒவ்வொரு மாத பௌர்ணமியும் சிவ வழிபாடுக்கு மிகவும் ஏற்றதாகும். ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அப்படி ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிக மிக விசேஷமானதாகும். ஜோதிட ரீதியாகவும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.

அன்னாபிஷேகம் என்றால் என்ன?

சுத்தமான பச்சரிசியை குலைவாக வடித்து, அதை நன்கு ஆற வைத்து, பிறகு அந்த அன்னத்தை கொண்டு, சிவபெருமானின் லிங்க திருமேனி முழுவதையும் போர்த்தி விடுவார்கள். அதோடு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஐப்பசி மாத பௌர்ணமியில் நடைபெறும் இந்த அபிஷேகத்திற்கு மகா அன்னாபிஷேகம் என்று பெயர்.

அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்

  • கோடி புண்ணியம்: அன்னாபிஷேகம் அன்று சிவபெருமானுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னத்திலும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால் ஒரு அன்னாபிஷேகம் தரிசனம் கண்டால், கோடி சிவ லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணியம் கிடைக்கும்.
  • அன்ன தரித்திரம் நீங்கும்: அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு அவர்களின் தலைமுறைக்கே அன்ன தரித்திரியம் என்பது ஏற்படாது.
  • சிறப்பு வாய்ந்த வழிபாடு: சிவபெருமானுக்கு தினமும் பலவிதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை சில குறிப்பிட்ட பொருட்களால் செய்யப்படும் அபிஷேகங்கள் மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரமான திங்கட்கிழமைகளில் செய்யப்படும் சங்காபிஷேகம் எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதே போல் ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது சிறப்புக்குரியதாகும்.
  • உலக உயிர்களின் படியளக்கும் நாள்: ஈசன், உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளந்த தினமாக இந்த நாளை புராணங்கள் குறிப்பிடுகின்றன.
  • பரம்பொருள் உணர்த்துதல்: இறைவன் அனைத்து பொருளிலும் பரபிரம்மமாக நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இந்த நாளில் ஜோதிட ரீதியான பரிகாரங்களை மேற்கொள்வதும், சிவபெருமானின் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நற்பலன்களை அதிகரிக்கும்.

ஐப்பசி அன்னாபிஷேகம் 2025 தேதி மற்றும் நேரம்

இத்தகைய ஐப்பசி மகா அன்னாபிஷேகம் இந்த ஆண்டு நவம்பர் 05ம் தேதியன்று புதன்கிழமையில் வருகிறது. நவம்பர் 04ம் தேதி இரவு 09.43 மணிக்கு துவங்கி, நவம்பர் 05ம் தேதி இரவு 07.27 வரை பௌர்ணமி திதி உள்ளது. அன்றைய தினம் காலை 10.14 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் அமைந்துள்ளது.

  • அன்னாபிஷேக நேரம்: பெரும்பாலும் அன்னாபிஷேகம், அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை நேரத்திலேயே நடைபெறும். ஆனால் சில கோவில்களில் அந்தக் கோவிலின் பஞ்சாங்க விதிகளின் படி காலையில் நடத்தப்படுவது உண்டு.
  • பரணி நட்சத்திர சிறப்பு: இந்த ஆண்டு பரணி நட்சத்திரம் வரும் நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது மிக மிக விசேஷமானதாகும். பொதுவாக அன்னாபிஷேகம் ஐப்பசி மாத பௌர்ணமியில் அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரங்கள் இணைந்து வரும் நாளிலேயே நடத்தப்படுவது வழக்கம். பரணி நட்சத்திரத்திற்குரிய அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் சிவபெருமானின் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, சுகபோகமான வாழ்க்கை அமையும். முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் அன்னாபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும் மிகப் பெரிய புண்ணியம் வந்து சேரும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே ஐப்பசி அன்னாபிஷேகம் எனப்படும்.

அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடி சிவ லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். அத்துடன் அன்ன தரித்திரம் நீங்கி, சுகபோகமான வாழ்க்கை அமையும்.

பொதுவாக அன்னாபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வு. முருகன் கோயில்களில் வேறு சிறப்பு அபிஷேகங்கள் உண்டு. இருப்பினும், தமிழ் மாத வழிபாடுகள் அனைத்து ஆறுபடை வீடுகளிலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.

Our Other Services