Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆடி அமாவாசை விரதத்தின் அற்புதமான சிறப்புகளும், பலன்களும்

ஆடி அமாவாசை நாள் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மற்ற அமாவாசைகளை விட ஆடி அமாவாசை அதீத சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் நாம் இருக்கும் விரதம் அளவில்லாத புண்ணிய பலன்களை தரக் கூடியதாகும்.

முன்னோர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பிறகு செய்ய வேண்டிய பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணம் அளித்து, விரதம் இருந்து, அவர்களிடம் வேண்டிய வரங்களை பெற ஏற்ற நாள் இதுவாகும்.

ஆடி அமாவாசை சிறப்புகள்

  • சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் ஆட்சி பெறும்.
  • இந்த நாளில் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தி ஏற்பட, தர்ப்பணம் செய்வது அவசியம்.
  • பித்ருலோகத்தில் இருப்போர் அல்லது பிறவி எடுத்தவர்களுக்கு நற்கதி வேண்டி வழிபடும் நாள்.

தர்ப்பை பயன்படுத்துவது ஏன்?

தர்ப்பை புல்லின் ஆற்றல் மிகுந்தது. இது தானாக வளரும், நீரில் அழியாதது, சக்தி வாய்ந்தது. தர்ப்பணக்காலங்களில் இந்த புல்லின் சக்தி அதிகரிக்கும். அதனால் முன்னோரர்களின் ஆத்மாவை இது ஈர்க்கும்.

ஆடி அமாவாசை விரத பலன்கள்

  • பித்ரு தோஷங்களில் இருந்து விடுபட வாய்ப்பு.
  • பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குதல் நற்பலன் தரும்.
  • எள்ளும் தண்ணீருடன் ஹோமம் செய்வதால் நிதி பிரச்சனைகள் தீரும்.
  • குலதெய்வ அருள் பெற, முதலில் பித்ருக்களின் ஆசி பெற வேண்டும்.
குறிப்பு: பித்ரு கடன்களை தவறாமல் செய்ய வேண்டும். இல்லையேல், தெய்வங்களின் அருள் கூட தடைபடலாம்.

Our Other Services